துளி
Icon துளி

துளி

by தகவல் தொழில்நுட்ப பிரிவு , நாம் தமிழர் கட்சி

Let's join drop by drop; Dream of the ocean!

App Nameதுளி
Developerதகவல் தொழில்நுட்ப பிரிவு , நாம் தமிழர் கட்சி
CategoryProductivity
Download Size35 MB
Latest Version1.0.2
Average Rating0.00
Rating Count0
Google PlayDownload
AppBrainDownload துளி Android app
Screenshot துளி
Screenshot துளி
துளித்துளியாய் இணைவோம்; பெருங்கடலாகும் கனவோடு!

மண்ணின் மீதும், மக்கள் மீதும் பற்றுறுதி கொண்ட, தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு அரசியற்படுத்தப்பட்ட ஒரு இளையோர் கூட்டம் எவ்வித எதிர்பார்ப்புமற்று மாற்று அரசியலுக்காய் நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறது. அதற்குத் தோள்கொடுத்து உதவ வேண்டியதும், ஒரு நல்லரசியல் துளிர்விடத் துணைநிற்க வேண்டியதும் சனநாயகப் பற்றாளர்களின் தலையாயக் கடமையாகும்.


எவ்விதப் பின்புலமும் இல்லாத எளிய மனிதர்களால் கட்டப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிற நாம் தமிழர் கட்சி எனும் மக்கள் பாதுகாப்புப் பெரும்படையை வளர்த்து வலிமையடையச் செய்ய ஒவ்வொருவரும் தங்களால் இயன்றப் பங்களிப்புகளைச் செய்ய முன்வர வேண்டும். எவ்விதத் தத்துவ தடம்பிறழ்வோ, கொள்கை சறுக்கலோ, அரசியல் சமரசமோ எதுவுமற்று நன்னெறியோடு நேர்மையானப் பாதையில் நாம் தமிழர் கட்சி பயணித்தாலும் எப்போதும் பொருளாதார நெருக்கடியே நமது செயற்பாட்டை மட்டுப்படுத்துகிறது. வளர்ச்சியில் ஒரு தேக்கநிலையை உருவாக்குகிறது. பொருளாதாரப் பலமும், ஊடக வெளிச்சமும் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால் நாம் அடைந்திருக்கிற வளர்ச்சியைவிடப் பன்மடங்கு வளர்ச்சியை அடைந்திருப்போம் என்பது எவராலும் மறுக்கவியலா உண்மை.

இன்றைய அரசியல் பரப்பில் தமிழ்த் தேசிய இனத்தின் பாதுகாப்பு படையாக, இன மீட்சி உரிமைக் குரலாக திகழ்ந்து வருகிற நாம் தமிழர் கட்சி தனது இலட்சியப் பயணத்தை எவ்வித தடையும் இல்லாமல் உறுதியோடு தொடரவேண்டிய நிலையில் இருக்கிறது. பாதையை தேடாதே; உருவாக்கு! என்று சொன்ன தலைவரின் மக்கள் நாம். எனவே நமக்கென இலட்சியப் பாதையை உருவாக்கி இலக்கை வென்றெடுக்க பொருளாதாரக் கட்டமைப்பு ஒன்றினை மிகச்சரியாக உருவாக்கிட ‘துளி’ என்கின்ற மாபெரும் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

‘ஆகவே, பொருளாதாரப் பலம் படைத்த இனமானத்தமிழர்களும், மாற்று அரசியலை விரும்பி நிற்கும் சனநாயகவாதிகளும் துளி திட்டத்தின் வாயிலாக கட்சி வளர்ச்சிக்குப் பெருந்தடையாக இருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்ய தங்களால் இயன்ற ஒரு சிறு தொகையை இம்மாதத்திற்கான துளியாக வழங்கி கட்சியின் வளர்ச்சிக்குத் துணைநில்லுங்கள் என உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.
-
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

More apps from the developer

Related Apps

More Apps like துளி